முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு வேறு சுற்று வட்டப்பாதைகளில் 8 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ சாதனை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா  - இரு வேறு சுற்று வட்டப்பாதைகளில்  8 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி 35 ராக்கெட் நிலை நிறுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். இது நீண்ட தூரம் பயணித்து செயற்கை கோள்களை நிலை நிறுத்திய முதல் பயணமாகும். இந்த பயணம் இஸ்ரோ சரித்திரத்தில் ஒரு சாதனை அத்தியாயம் என இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் தெரிவித்தார். பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஒரே நேரத்தில் 8 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் தளத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று காலை 9.12 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட 17 நிமிடத்தில் அதில் இருந்த 371 கிலோ ஸ்காட் சாட் -1 செயற்கை கோள்  பூமியில் இருந்து  712 கிலோ மீட்டர் உயரத்தில்  சூரிய துருவ ஒருங்கிணைப்பு வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வானிலை ஆய்வுக்கு பயன்படுவதாகும்.

இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், அந்த ராக்கெட்டில் இருந்த இரு செயற்கைக்கோள்கள் (கல்வி நிறுவன செயற்கைகோள்) மற்றும் அல்ஜீரியாவின் 3 செயற்கைகோள்கள், கனடா, அமெரிக்காவிற்கு உரிய தலா ஒரு செயற்கைக் கோள்கள் ஆகியவை  உரிய வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. .எஸ்.எல்.வி. சி.35 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 8 செயற்கைக்கோள்களும் இரு வேறு வட்டப்பாதைகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட தகவலை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ) தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்தார். இஸ்ரோ சரித்திரத்தில் இந்த நாள் சாதனை நாள் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள்களை இரு வேறு வட்டப்பாதைகளில் நிலை நிறுத்த வேண்டி இருந்ததால், பி.எஸ்.எல்.வி. சி.35 ராக்கெட் இரு முறை எரி பொருள் பற்ற வைக்கப்பட்டது. இரு முறை ராக்கெட் எரி பொருள் எரிக்கப்பட்ட இந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பயணம் மிக நீண்ட பயண தூரம் கொண்டதாகும். வானிலையை ஆய்வு செய்யும் ஸ்காட் சாட் -1 செயற்கைக்கோள்  5ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்டது ஆகும். இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட பிரதான செயற்கைகோள் 10 கிலோ எடை கொண்டது. அதனை பம்பாய் ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கி இருந்தார்கள். பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஒரே நேரத்தில் 8 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இஸ்ரோவின் புதிய சாதனை
இந்தியாவின் வெற்றிகரமான செயற்கைக்கோள் ஏவு வாகனமான பிஎஸ்எல்வி மேற்கொள்ளும் 37-வது விண்வெளிப் பயணம் இதுவாகும். பிஎஸ்எல்வி-சி35 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்கா, கனடா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிகரீதியிலான 5 செயற்கைக் கோள்களும், ஐ.ஐ.டி மும்பை மற்றும் பெங்களூரு தனியார் பல்கலைகழக மாணவர்கள் வடிவமைத்தை 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் ஒரே ஏவு வாகனம் மூலம் இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்