முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தம்: இஸ்ரோவின் சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நேற்று ஒரே ராக்கெட் மூலம் 8 செயற்கை கோள்களை விண்ணில் 2 சுற்று வட்டப்பாதைகளில் நிலைநிறுத்திய இஸ்ரோவின் அபார சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை 2 சுற்றுப்பாதைகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று காலை வெற்றிகரமாக செலுத்தினர். அதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

8 செயற்கைகோள்களுடன் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அவற்றை 2 சுற்றுப்பாதைகளில் நிலை நிறுத்திய இத்தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதனால், இந்தியாவுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது. அதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நமது விண்வெளி வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களது புதிய கண்டுபிடிப்பின் ஆர்வம் 125 கோடி இந்தியர்களின் மனங்களை தொட்டுவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்