முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமை மீறல்கள் பாகிஸ்தானில் அதிகரிக்கின்றன: சர்வதேச தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 2108 பேரை அந்த நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று சர்வதேச தொண்டு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.  அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட ‘மனித உரிமை கண்காணிப்பகம்’ என்ற அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளை அமைத்து செயல்படுகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் போலி என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டு போலீஸார் எவ்வித விசாரணையும் இன்றி பலரைச் சுட்டுக் கொன்று வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் 2108 பேர் என்கவுன்ட்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் ஒரு போலீஸார்கூட காயம் அடையவில்லை என்பது வியப்பளிக்கிறது. 

விசாரணை கைதிகளிடமும் போலீஸார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். கை, கால் எலும்புகளை உடைப்பது, கொடூரமாக சித்ரவதைச் செய்வது ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண் கைதிகளைப் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். பாகிஸ்தான் போலீஸார் மீது அந்த நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்