முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ரத்தாகும் நிலை : இலங்கை அரசு அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  - ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மனு.

ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எலேனர் சாப்ஸ்ரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.இவரது ஆலோசனைக்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் மதிப்பு தருவது உண்டு. ஆகையால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உறுதி செய்யலாம் என்று கருதப்படுகிறது.

தடை நீக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் சொத்துகள், வங்கி வைப்பு தொகைகள் மீண்டும் கிடைக்கும்; விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும். இது இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்