முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெறவேண்டி  மாநில அம்மா பேரவை சார்பில் நேற்று மதுரை திருமோகூர் சக்கரதாழ்வார் சன்னதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, கே.மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன், எம்.ஜெயராமன், மா.இளங்கோவன், வக்கீல் ரமேஷ், பி.அய்யப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ராணிப்பேட்டை நவல்பூரில் அமைந்துள்ள சந்தன விநாயகர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. கோவை புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடத்தி, மனமுருக பிராத்தனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில், பூந்துறை குப்பியண்ண சுவாமி கோவிலில் கோமாதா பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பாக, அருள்மிகு மாரியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடத்தியும், அங்கப்பிரதட்சனம் செய்தும் தொண்டர்கள் வழிபட்டனர். திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், அப்பாச்சி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தில், ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், முதல்வர் ஜெயலலிதா பெயரில், சிறப்பு அர்ச்சனைகளும், பூஜைகளும் செய்யப்பட்டன. திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், அரியத்துறை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மரகதவல்லி சமேத வரமூர்த்திஸ்வரர் திருக்கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பெருந்திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று, முதல்வர் ஜெயலலிதா, பூரண நலம் பெற வேண்டி வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago