முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக உறவில் மிக நேசத்துக்குரிய நாடு பட்டியலில் பாகிஸ்தான்? இந்தியா நாளை முடிவு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :   வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பாக ,மிக நேசத்துக்குரிய நாடு பட்டியலில் பாகிஸ்தானை சேர்ப்பதா என்ற முடிவை இந்தியா நாளை(வியாழக்கிழமை) எடுக்கிறது.  அயல் நாடுகளுடன் இந்தியா ஆண்டு தோறும்  6400கோடி டாலர் வர்த்தகம் மேற்கொள்கிறது. இந்த வர்த்தகத்தில் பாகிஸ்தான் இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தகம்  267 கோடி டாலர் ஆகும்.

காஷ்மீர் யுரி ராணுவ முகாமில் இந்த மாதம் 18ம் தேதியன்று  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 18 வீரர்கள் பலியானார்கள். மேலும் 19 வீரர்கள் காயம் அடைந்தார்கள்.  இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவில் கடும் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் வர்த்தகம் மேற் கொள்ளும் நாடுகளில், இந்தியாவுக்கு மிக நெருக்கமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை வைப்பதா ?என்பது குறித்து முடிவை  இந்தியா நாளை(வியாழக்கிழமை) எடுக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் கட்டணம் தொடர்பாக உலக  வர்த்தக அமைப்பின் பொது ஒப்பந்த அடிப்படியில் மிக நேசத்துக்குரிய நாடடு நிலை அளிக்கப்படுகிறது.  அந்த நிலையை உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் நாடுகளாக உள்ள நாடுகள் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன.

இந்திய வர்த்தக அமைப்பான அசோசம்  மதிப்பீட்டின் படி கடந்த 2015-16ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வர்த்தகம்  64100 கோடி டாலர் ஆகும். இதில் பாகிஸ்தான் வர்த்தகம் 267கோடி டாலர் .  பாகிஸ்தானுக்கு இந்திய ஏற்றுமதி அளவு 217 கோடி டாலராக உள்ளது. அதாவது இந்தியா மேற்கொண்ட  மொத்த ஏற்றுமதி வர்த்தக அளவில் .83 சதவீதம் ஆகும். பாகிஸ்தானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த அளவு 0.13சதவீதம் ஆகும் ,அதாவது பாகிஸ்தானுடன் 50 கோடி டாலர் அளவு இறக்குமதியை மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது.

கடந்த திங்கட் கிழமையன்று , பிரதமர் மோடி தலைமையில் , நடந்த ஆய்வு கூட்டத்தில் இந்தூஸ் தண்ணீர் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஜீலம் உள்பட பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகளில் இருந்து தண்ணீர் ஒப்பந்தப்படி அதிக அளவில் தண்ணீரை  இந்தியா பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago