முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா தொடர்ந்து முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில்  பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது.. அதில் நடந்த  இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இரட்டையர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.  அவர் மொத்தம் 9,730 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் மார்ட்டினா ஹிங்கிஸ் 9,725 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாகேத் மைனேனி 138-வது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ராம்குமார் ராமநாதன் 229-வது இடத்திலும், யூகி பாம்பரி 282-வது இடத்திலும் உள்ளனர்.  ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் ரோகன் போபண்ணா 18-வது இடத் திலும், லியாண்டர் பயஸ் 60-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்