முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மரணம் : ஒபாமா உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஜெருசலேம் - இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 93. ஷிமோன் பெரஸுக்கு இருவாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஹிமோன் பெரஸ் நேற்று காலை மரணம் அடைந்ததாக அவரது மகன் செமி அதிகாரபூர்வமாக தெரிவித்தார். ஷிமோன் பெரஸின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஷிமோன் பெரஸின் மரண செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட உலகத் தலைவர்கள் பலர் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த ஷிமோன் பெரஸ் 2007-2011 ஆகிய வருடங்களில் இஸ்ரேலின் அதிபராக பதவி வகித்தவர். ஷிமோன் பெரஸ் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக 1994-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது நினைவுக்கூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்