முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை தொடர்ந்து, சார்க் மாநாட்டை புறக்கணித்த வங்கதேசம்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

டாக்கா  - பாகிஸ்தானில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 19 வது சார்க் மாநாட்டை இந்திய புறக்கணித்துள்ளதை அடுத்து வங்க தேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணித்துள்ளன. நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 19வது சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு குறித்த விவாதம்தான் முக்கிய பங்கு வகிக்க இருந்தது. மேலும் இதில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காஷீமீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியானதையடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

மேலும், இந்தியா சார்பில் இதுகுறித்த கடிதம் ஒன்றையும் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ள நிலையில், அண்டை நாடான வங்க தேசமும் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சார்க் மாநாட்டில் வங்க தேசமும் கலந்து கொள்ளாது என்ற கடிதத்தை சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், சார்க் அமைப்பை உருவாக்கிய உறுப்புநாடு என்ற வகையில் பிராந்திய கூட்டுறவு தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வங்க தேசம் உறுதியாக உள்ளது என்றும் பரஸ்பர உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கும வகையில் எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் ஒருநாடு தலையீடு வளர்ந்துவரும் நிலையில் சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் சூழல் தற்போது இல்லை என்பதால் இந்த மாநாட்டில் வங்கதேசம் பங்கேற்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்து.இதனைப் போன்றே பூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்