முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் கவுதம் கம்பீர்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா  - 2014, ஆகஸ்டில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆடிய கவுதம் கம்பீர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது ரன் ஓடும்போது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக கவுதம் கம்பீர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவுக்குப் பதிலாக அரியாணா ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் 356 ரன்களை 71.20 என்ற சராசரியில் பெற்ற கம்பீர் தேர்வு குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கம்பீர் எப்போதுமே தேர்வுக்குரிய பரிசீலனையில் இருந்தார், காரணம் அவர் சிறப்பாக ஆடி வருகிறார். மேலும் 12-13 டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருப்பதால் முன்கள வீரர்களின் அனுபவம் பெற்ற ஒருவர் இருப்பது நல்லது என்று அணி நிர்வாகம் கருதுகிறது” என்றார்.

மற்றொரு அதிரடி தொடக்க வீரர் சேவாக் மற்றும் கம்பீர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 4,412 ரன்களைச் சேர்த்தது, டெஸ்ட் போட்டிகளில் இந்திய தொடக்க ஜோடிக்கான அதிகபட்ச ரன்களாகும். கம்பீர் 56 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களுடன் 42.58 என்ற சராசரியில் 4046 ரன்களை எடுத்துள்ளார். முரளி விஜய்யுடன் கவுதம் கம்பீர் இறக்கப்படுவாரா, அல்லது ஷிகர் தவணிடம் இந்திய அணி மீண்டும் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்