முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

மாண்டியா  - காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, மாண்டியா மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், காவேரியிலிருந்து தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு, விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், காவேரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் எவ்விதத்திலும் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்தனர். மேலும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும், காவேரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கர்நாடக அரசு முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து கர்நாடகாவின், மாண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. ஏற் கெனவே நடைபெற்ற கலவரங்களில் ஏராளமான தமிழக வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்டியா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்