முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித்தேர்தலில் மூன்று நாட்களில் 43 ஆயிரம் பேர் வேட்புமனுத்தாக்கல்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் முழுவதும்  இதுவரை  43 ஆயிரம் பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே 26 ம்தேதி முதல் தொடங்கியது.

நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு நேற்று மட்டும் 82 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 334 பேரும் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 3 ஆயிரத்து 930 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு  உறுப்பினர் பதவிக்கு 26ஆயிரத்து641 பேரு்ம், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 112 பேரும் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 136 பேரும் நகர பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 491 பேரும் ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 726 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்,. ஒட்டுமொத்தமாக மூன்றுநாட்களில் 42 ஆயிரத்து 907 பேர் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்