முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பி.எஸ்.படை கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதால்  எல்லை பகுதியில் உள்ள பி.எஸ்.எப். படை வீரர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் வலியுறுத்தினார்.

எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் செயல்படும் விதம் குறித்து ஆய்வு கூட்டம் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்தது- இந்த கூட்டத்தை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து முக்கியமாக விவாதித்தார். பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் பகுதிகளில் தீவிரகாண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் , உள்துறை, எல்லை பாதுகாப்பு படை,(பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் எல்லையை யொட்டிய பகுதி படைபிரிவு) அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

பாகிஸ்தானை யொட்டி இந்தியாவின் எல்லை பகுதி  3ஆயிரத்து 323 கிலோ மீட்டர் தூரத்திற்கு  உள்ளது . இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையொட்டி  1225 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. 553 கிலோ மீட்டர் பஞ்சாப் மாநிலத்தை யொட்டியும்,  508 கிலோ மீட்டர் தூரம் குஜராத் மாநில எல்லை பகுதியிலும் உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திற்கு அருகே உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியை பி.எஸ்.எப் வீரர்கள் தீவிரவமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தை யொட்டி இந்தியாவின் எல்லைப்பகுதி  4ஆயிரத்து 96 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. அந்த எல்லை வழியாக கால்நடை கடத்தல் , போதை மருந்து கடத்தல் போன்றவற்றை தடுக்க பி.எஸ்.எப் படை வீரர்கள்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்