முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஷாங்காய் : உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.  இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே 30,000 மக்கள் வந்து செல்கின்றன.  இந்த புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் நிலையம் பற்றி சீன ரயில்வே துறை கூறியபோது,  "புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே உருவாக்கப்படவுள்ளது. இதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பரப்பின் அளவு ஐந்து கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சமம். இந்த புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளன.மேலும் இந்த ரயில் நிலையத்தால் சீனாவின் தொன்மையான அடையாளமான சீன பெருஞ் சுவருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணமே உருவாக்கப்படவுள்ளது” எனக் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்