முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி - டிரம்ப் ஆக்ரோஷ விவாதம்:

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப் இடையிலான ஆக்ரோஷ நேரடி விவாதம், 36 ஆண்டுக ளுக்கு முந்தைய டி.வி. பார்வையாளர்கள் சாதனையை முறியடித்துள்ளது.  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம் நடைபெற்றது.

நியூஜெர்சி மாநிலத்தின் ஹாப்ஸ்டிரா பல்கலைக்கழக அரங்கில் 98 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தை அமெரிக்க தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்நிலையில் அமெரிக் காவில் இந்த விவாதத்தை 8.4 கோடி பேர் பார்வையிட்டதாக தெரியவந்துள்ளது.

1980-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜிம்மி கார்ட்டர், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ரீகன் இடையிலான நேரடி விவாதத்தை அமெரிக்க தொலைக்காட்சிகளில் 8.06 கோடி பேர் பார்வையிட்டனர். இந்த எண்ணிக்கையே இதுவரை சாதனை அளவாக இருந்தது. இந்நிலையில் ஹிலாரி - டிரம்ப் இடையிலான விவாதம் இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

“விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்த 13 அமெரிக்க சேனல்களின் பார்வை யாளர்கள் மட்டுமே 8.4 கோடி பேர் ஆகும். உலகம் முழுவ தும் டி.வி. சேனல்கள் மற்றும் இணைய தளங்களில் மேலும் பல லட்சம் பேர் இந்த விவாதத்தை பார்வையிட்டுள்ளனர்” என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்