முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா கடற்கரை குடில்களில் இனி சி.சி.டி.வி. கட்டாயம்: சுற்றுலா அமைச்சர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவா கடற்கரையில் அமைந்திருக்கும் குடில்களுக்கு பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் திலிப் பருலேகர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியதாவது,

''கடற்கரை குடில் உரிமையாளர்கள் தங்கள் இடங்களில் சிசிடிவி கேமராவைக் கட்டாயம் பொருத்த வேண்டும். இம்முறை மூலம் ஒவ்வோர் ஆண்டும் கோவாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும்.  அரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள கொள்கை மூலம், இனி சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ள குடில்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும்.
மேலும் இக்கொள்கையில், ஓராண்டாக இருந்த குடில்கள் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

கடற்கரைக் குடில்களில் தென்னங்கீற்றுகளால் வேயப்படும் உணவகங்களும் அமைக்கப்பட்டிருக்கும். குடில்களில் உண்ணவும், ஓய்வெடுக்கவும், பாடல்கள் கேட்கவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் விதத்தில் இவை அதிகம் உருவாக்கப்படுகிறது.

சில குடில்களில் போதை மருந்துகள் உட்கொள்வது, தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட சம்பவங்களும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் சிசிடிவி கேமரா வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்