முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து: முன்னாள் நீதிபதி கட்ஜு மீது தேச துரோக வழக்கு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பீகார் தொடர்பாக சர்ச்சைக் குரிய கருத்துகளைத் தெரிவித்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத் தில், “பாகிஸ்தானியர்களே நாங்கள் காஷ்மீரை உங்களுக் குக் கொடுக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் பீகாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு கூட்டுச் சலுகை. இரண்டையுமே சேர்த் துத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது” என கிண்டலடித் திருந்தார்.  இதற்கு பல்வேறு தரப்பி லிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. எனினும், கட்ஜு தொடர்ந்து கிண்டலான கருத்து களைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மேலவை உறுப்பினர் நீரஜ் குமார், சாஸ்திர நகர் காவல் நிலையத்தில் கட்ஜு மீது அரசியல் சாசன சட்டம் 124 ஏ (தேச நிந்தனை) பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார்.  கட்ஜுவின் கருத்துக்கு, “கட்ஜு தன்னை பீகாரின் ஆபத் பாந்தவனாக காட்டிக் கொள் கிறார்” என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதிலடி கொடுத்திருந்தார்.

அதற்கு நிதிஷைக் கிண்ட லடிக்கும் வகையில், “நான் பீகாரிகளின் ஆபத்பாந்தவன் அல்ல. சகுனி மாமா” என கட்ஜு பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக பாட்னா தலைமை குற்றவியல் நீதிமன்றத் தில், அரவிந்த் குமார் என்ற வழக்கறிஞர் கட்ஜு மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தேசத் துரோக (12-ஏ) உட்பட சட்டப்பிரிவுகள் 500, 501, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இவ்வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்