முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவு தளர்வு: காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ள நிலையில், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனாலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பள்ளத்தாக்கு முழுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் '' காஷ்மீரின் எந்தப் பகுதியிலும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதே நேரம் பள்ளத்தாக்கின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144-ன் கீழ் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன'' எனக்கூறினார்கள்.

காஷ்மீரில் மூன்று நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததால் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கோய்மோ பகுதியில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அங்கே நிலைமை சீரடைந்ததால், ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6 வரை பந்த் நடத்தக்கோரி பிரிவினைவாதிகள் விடுத்த அழைப்பால், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததைக் காண முடிந்தது. பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்குஇரண்டு மாதமாக வன்முறைகள் நடக்கின்றன. இதில் பிரிவினை வாதி போராட்டக்காரர்களுக்கும்  போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் இதுவரை 82 பேர் பலியானார்கள். இதில் இரு போலீசாரும்  உயிரிழந்தனர்.  10 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்