முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித்தேர்தலில் பொது இடங்களில் சுவரொட்டி விளம்பரங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சித்தேர்தலில் எந்தவொரு பொது இடங்களிலும் சுவரொட்டிகள், விளம்பரங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

வேட்பாளர்கள் பெயரிலோ. கட்சிகள் பெயரிலோ மற்றும் இது தொடர்பான எந்தவொரு வாசகங்களோ அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பரத்தட்டிகளோ விளம்பரப்பட்டிகைகளோ  சுவரொட்டிகளோ. சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்தவொரு பொது இடத்திலும் இருத்தல் கூடாது, இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடைமுறைப்படுத்திய விதிகளையே நடைபெறவிருக்கின்ற 2016. உள்ளாட்சி தேர்தல்களிலும் பின்பற்றிட வேண்டும், எவ்விதமான விளம்பரத்தட்டிகளோ  விளம்பரப்பட்டிகைகளோ  சுவரொட்டிகளோ விளம்பரப்படங்களோ மாநிலத்தின் எந்தவொரு பொது இடத்திலும்; இருப்பின் அவைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்,

சுவர்களில். வேட்பாளர்களின் பெயர்களோ. கட்சிகளின் பெயர்களோ அல்லது அது தொடர்பான வாசகங்களோ வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால். அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ணப்பூச்சுளால் மறைத்து உடனடியாக அழிக்கப்பட வேண்டும், இப்பணியை எவ்வித இடர்கள் இல்லாமலும் எவ்விதமான பாகுபாடின்றியும் மேற்கொண்டிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்