முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்கு தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படை வரவழைப்பது என்று மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 17 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தேர்தல் பார்வையாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இன்று கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தேர்தல் ஆணையர் சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பங்கேற்றார்.இந்த ஆலோனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் பதட்டமான பகுதிகளில் முன் எச்சரிக்கை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மிக நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தவும் மக்கள் சிறிதும் பயிமின்றி வாக்களிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலம் எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாக்குச்சாவடிகளுக்கும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல். அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது.அரசு அச்சகம் மற்றும் பிற அச்சகங்களிலிருந்து வாக்கு சீட்டுகளை, பகிர்வு மையங்கள் அமைந்துள்ள மாவட்ட அலுவகலங்களுக்குப் பாதுகாப்பாக கொண்டு செல்வது என்றும் முடிவு செய்யபட்டது.

வாக்கு சீட்டு பகிர்வு மையங்கள், வாக்குச்சீட்டுகள், பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்.சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமான அளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. தேவைப்பட்டால் மத்திய காவல் படையில் இருந்து காவலர்களை வரவழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.சிறப்பு காவலர்கள், ஊர்காவல் படையினரையும், பிறரையும் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 25 பாதுகாப்பு விதிமுறைகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குனர் மகரபூஷணம், ஊரக, ஊராட்சிகள் துறை இயக்குனர் பாஸ்கரன், நகராட்சி துணை ஆணையர் அன்புச்செல்வன் மற்றும் உள்ளாட்சித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago