முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு நிலைமை குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியா -பாகிஸ்தான்  எல்லை பாதுகாப்பு நிலைமை குறித்தது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல்,   உள்துறை செயலாளர் ராஜீவ் மெகிரிஷி, பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள், மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அவர்கள் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் எந்த வித தாக்குதலையும் எ திர் கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள விவரத்தை விளக்கினர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) செயல்பாடும் குறித்தும் அமைச்சரிடம் விளக்கப்பட்டது.

காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு  பகுதியில் யுரி ராணுவ முகாம் உள்ளது. இந்த  ராணுவ முகாமில்  கட,ந்த மாதம் 18ம் தேதியன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில்  18 வீரர்கள் பலியானார்கள். மேலும் 19 வீரர்கள் காயம் அடைந்தார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளதால் அந்த மாநிலம் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது. அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் , அந்த நாட்டு அரசும் உதவி வருகிறது. தீவிரவாதிகள் முகாமுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. நிதியுதவியும் தாக்குதல் குறித்த ஆலோசனைகளையும் அளித்து வருகிறது.
 
காஷ்மீர் டிரால் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினை வாதிகள் போராட்டத்தால் பதட்டம் நீடித்து வருகிறது.  காஷ்மிர் மக்களின் சுதந்தி போராட்டத்திற்கு நாங்கள் துணை நிற்போம். கொல்லப்பட்ட தீவிரவாதி புர்கான் வானி தியாகி. அவரது இறப்பு நாளை கறுப்பு தினமாக அனுசரிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் அவரது இந்த அறிவிப்பு இந்தியாவை எரிச்சலைடையச்செய்தது. மேலும் அவர் தனது நாட்டு பிரச்சினைகளை பார்த்தால் போதும். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர்  ராஜ் நாத் சிங் , பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

 இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 6 பேர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 7 வீரர்கள் பலியானார்கள். தீவிரவாதிகள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்தியாவில் குறிப்பாக ராணுவ தளங்கள் மற்றும் வீரர்கள் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவது தொடர்பான ஆதாரங்களை இந்தியா சேகரித்து வைத்துள்ளது. இந்த ஆதாரங்களை  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் நேரில் அழைத்து அளித்தார்.

 யுரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா கடந்த புதன் கிழமையன்று(செப். 28) பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகளின்  முகாம்களை அதிரடியாக தாக்கியது. நள்ளிரவில் 4 மணி நேரம் நடந்த தாக்குதலில்   38 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். எல்லை கோட்டுக்கு அப்பால் வந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது  போர் நிறுத்த விதியை மீறுவதாகும் என பாகிஸ்தான் அலறியது.

இந்த நிலையில் இந்தியா -பாகிஸ்தான் வழியே செல்லும் எல்லை பகுதியில்  உள்ள மக்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல்,   உள்துறை செயலாளர் ராஜீவ் மெகிரிஷி, பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள், மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்