முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆப்கான் பொதுமக்கள் 15 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

காபூல்  - அமெரிக்கா ராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர். அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் புதன்கிழமை அதிகாலை கிழக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 15 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலில் சில ராணுவ வீரர்களும், பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்திட சர்வதேச ராணுவம் மற்றும் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளது. ஆப்கானின் நங்கர்ஹர் மாகாணத்தை சேர்ந்த அச்சின் மாவட்டத்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியதை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு தாக்குதலிலும் பொதுமக்கள் பலியைத் தடுக்க எங்களாலான முயற்சிகளை செய்கிறோம். இந்த தாக்குதல் குறித்த கூடுதல் விசாரணைக்கு ஆப்கான் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம்” என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்