முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல - இந்தி நடிகர் சல்மான் கான்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      சினிமா
Image Unavailable

Pakistani artistes not terrorists: Salman Khan

புதுடெல்லி,  பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல.  அவர்களை தீவிரவாதிகளைப்போல கருதக்கூடாது. கலையையும் ,தீவிரவாதத்தையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து பார்க்க சுடாது என்று இந்தி நடிகர் சல்மான் கான் தெரிவித்தார்.

  காஷ்மீர் யுரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் தேதியன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் பலியானார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம்  கடந்த புதன் கிழமையன்று இரவு  பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவி 7 தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில்  38 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.  இந்திய ராணுவம் எல்லையை கடந்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது தொடர்பாக அறிவித்த நிலையில் , பாகிஸ்தான் நடிகர்களை இந்தி பட உலகில்  அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இந்திய பட துறையில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என இந்திய  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சல்மான் கான் தனது கருத்தை நேற்று டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். அப்போது பாகிஸ்தான் நடிகர் களை தீவிரவாதிகளை போல கருதக்கூடாது.  அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்