முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.  தமிழக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும், தேர்தல் பணிகளை மத்திய அரசு ஊழியர்களை கொண்டு நடத்த வேண்டும் என்றும் கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், “உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கட்டாயமாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும். வேட்பாளர்களின் மனுக்களையும், பிரமாண பத்திரங்களையும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும். தேர்தலில் இயன்றவரை தமிழக அரசு அதிகாரிகளை பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு ஊழியர்களை கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு மீதான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் வரை, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.   நீதிபதிகள் இந்த மனுவை வருகிற 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர். அதன்படி இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட் , தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், ஒரு வாரத்தில் தமிழக அரசு, தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்