முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்குள் தவறுதலாக சென்ற இந்திய வீரரை மீட்க நடவடிக்கை: ராஜ்நாத் சிங் உறுதி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்செயலாக பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான்  ராணுவம் பிடித்துவைத்துள்ளது அவரை விடுவிக்க  அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆயுதத்துடன் கட்டுப்பாட்டு எல்லையக் கடந்து தற்செயலாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் நுழைந்தார் என்று ராணுவ வட்டாரங்கள் வியாழனன்று தெரிவித்தன. இது குறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கு ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டு அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்ட்டது என ராணுவம் தெரிவித்தது. மேலும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை தாக்கியதற்கு பதிலடியாக தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 8 இந்திய வீரர்கள் பலியானதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி ஆதாரமற்றது என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

பாகிஸ்தான்  நாளிதழான டான் பத்திரிகை பாகிஸ்தான் ராணுவம் கூறியதாக மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ஒரு இந்திய வீரரை பிடித்துள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லை வழியாக தவறுதலாக சென்ற இந்திய வீரரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago