முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து ராணுவ தாக்குதல்: பாராட்டு தெரிவித்து கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய ராணுவம் புதன் இரவு சென்று அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதன்காரணமாக காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. பாகிஸ்தான் ஒரு வேளை பதில் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவும் அதிரடி தாக்குதல்களை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு காங்கிஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நேற்று வரவேற்பு தெரிவித்தனர். நாடு முழுவதும் பல்வேறு மக்களும் இந்த தாக்குதல் கொண்டாடினர்.  இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பதான்கோட் மற்றும் உரி போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டசபை சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்