முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று  தங்களது பிரச்சாரத்தை துவக்கினர். சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டார்கள். தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19–ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதி கடந்த 25–ம் தேதி அன்று மாலை அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே 26–ம் தேதி அன்று மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களும் நேற்று மதியம் 2 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து நேற்று அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கினர். கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகள், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது ஆகியவைகளை மக்களிடம் எடுத்து சொல்லி ஆதரவு கேட்டனர். ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் வேட்பாளருடன் சென்று ஓட்டு கேட்டார்கள். சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். மகிழ்ச்சியுடன் இரட்டை விரலை காட்டி அம்மாவுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று உறுதிபட கூறினார்கள். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டார்கள்.

சென்னை மாநகராட்சி 49-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க பெண் வேட்பாளர் ரஞ்சனி அங்குள்ள சஞ்சிவிராயன் கோவில் தெரு ஆஞ்சனேயர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். ராயபுரம் சஞ்சிவிராயன் கோவில் தெருவில் இருந்து புறப்பட்ட ரஞ்சனி, பாலுமுதலி தெரு, தாண்டவராயன் தெரு ஆகிய தெருக்களில் வீடு வீடாக சென்று முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையை சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர். பொதுமக்கள் அவரை வரவேற்று எங்கள் ஓட்டு உங்களுக்கே என்று உறுதியளித்தனர்.

இதே போல் ராயபுரத்தில் போட்டியிடும் யசோதா( 48), கிரேஸி( 50), இந்திரா (51), ஹேமலதா(52), கலியமூர்த்தி (53) ஆகியோர் தங்களது பிரசாரத்தை தொடங்கி வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ராயபுரம் பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம், வி.சிவா, வட்ட செயலாளர்கள் சி.லோகு, கே.எஸ்.மணி, இரா.மாறன், ஏ.சந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஆயிரம் விளக்கு 109 வார்டில் அ.தி.மு.க வேட்பாளரும் ஆயிரம் விளக்கு தொகுதி பேரவை செயலாளருமான வழக்கறிஞர் சதாசிவம் நேற்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அவருடன் வட்டசெயலாளர்கள் ராஜேஷ், கபிலன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.கவினர் கொடிகளுடன் திரண்டு சென்று வாக்கு சேகரித்தனர்.

63-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளரும் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான ரவிக்குமார் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நேற்று பிற்பகல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குசேகரிப்பில் வட்டசெயலாளர்கள் வெள்ளை சாகுல் அமீது, என்.எம்.சாதிக்பாட்சா மற்றும் கோழிக்கடை மோகன், ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க வேட்பாளர்கள் சென்ற இடங்களில் பேண்டு வாத்தியங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. வழியெங்கும் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் வண்ணப் புத்தகங்களாக அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல், மதுரையில் அ.தி.மு.க வேட்பாளர்கள், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கினர்.

அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்ட பகுதிகளான மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க.  வேட்பாளர்களை ஆதரித்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்,  மதுரை புறநகர் மாவட்ட  செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பிரச்சாரம் செய்தனர் .பிரச்சாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், கே.மாணிக்கம், பா.நீதிபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மேலூர் சாமி, கே.தமிழரசன், மாவட்ட கழக நிர்வாகிகள், எஸ்.என்.ராஜேந்திரன், அம்பலம், பஞ்சம்மாள், ஒன்றிய கழக செயலாளர்கள் சோமாசி, வெற்றிச்செழியன் மற்றும் சரவணன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 88வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெ.ராஜா, 23 வார்டில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் கு.திரவியம், 15 வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கிரம்மர்சுரேஷ், 63-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அழகு சித்ரா ரமேஷ் ,100வது வார்டில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் பி.கருப்புசாமி ஆகியோரை ஆதரித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில் மாவட்ட  துணைச்செயலாளர் சி.தங்கம், பகுதி செயலாளர்கள் பூமிபாலகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago