முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பற்றி அவதூறு: பேஸ்புக் மூலம் 40 பேர் காவல் ஆணையரிடம் புகார்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 40 பேர் ஃபேஸ்புக் மூலம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி அப்போலோ மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகள் நேற்று முன்தினம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் மூலம் வேகமாக பரவின.இதைத் தொடர்ந்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என டிஜிபி டி.கே ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் எச்சரித்திருந்தனர்.

இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் ஃபேஸ்புக்கில் நேற்று மாலைவரை 40 பேர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.இதுபற்றி, அவரிடம் கேட்ட போது, “முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என் றார்.இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்டவைகளின் சர்வர் அமெரிக்காவில் உள்ளது.நமக்கு தகவல் வேண்டு மென்றால் அவர்களைத்தான் நாட வேண்டும். தேவைப்படும் தகவல் குறித்து, நாம் அவர்களுக்கு மெயில் அனுப்புவோம். அவர் கள் சில நேரங்களில் உடனடி யாக பதில் அனுப்புவார்கள். சில நேரங்களில் தாமதம் செய் வார்கள். இதனால் அவதூறு பரப்பும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்பாட்டாளர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால், நிச்சயம் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்