முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் கடந்த சீசனில் 4 கோடி பேர் தரிசனம் : கேரள சட்டசபையில் தகவல்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மண்டல, மகரஜோதி சீசனில் 4 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

“சபரிமலைப் பகுதியில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. வனவிலங்கு களை பாதுகாக்கும் திட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

சபரிமலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நலன் களை அரசு பாதுகாக்கும். மகரவிளக்கு தினத்தில் பொன்னம்பலமேடு பகுதியில் புனித ஜோதி ஏற்றும் உரிமை பழங்குடியினரிடமே தரப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago