முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி

புதன்கிழமை, 5 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - உ.பி. சட்டசபை தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி அமைய உள்ளது. இதில் பாபுலால் மராண்டி, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைகின்றனர்.  உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பீகாரில் ஆட்சியில் உள்ள மெகா கூட்டணி உ.பி. யிலும் தொடர முதல்வர் நிதிஷ் குமார் விரும்பினார். ஆனால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இதை ஏற்கவில்லை.

உ.பி.யில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறிவிட்டது. ஆர்ஜேடி தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மகளுடனான திருமண உறவு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் குடும்பத்தில் ஏற்பட்டுவிட்டது. இதனால் முலாயம் சிங்கை எதிர்க்க லல்லு விரும்பவில்லை.

இந்நிலையில் உ.பி.யின் சிறிய கட்சிகளை ‘ஜனதா பரிவாரம்’ என்ற பெயரில் நிதிஷ் தனது கட்சியுடன் இணைத்து போட்டியிட முயன்றார். இதற்கும் தடை ஏற்பட்ட நிலையில் நின்று போயிருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
நிதிஷ் கூட்டணியில் முன்னாள் மத்திய அமைச்சரான அஜித்சிங் கின் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சேர முன்வந்துள்ளன. இக்கட்சிகளுடன் உ.பி.யின் முஸ்லிம் கட்சியான ‘பீஸ் பார்ட்டி (அமைதி கட்சி)’ உள்ளிட்ட சிலவற்றையும் நிதிஷ் தன்னுடன் சேர்க்க முயன்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago