முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்:கோலி-ரகானே சிறப்பான ஆட்டத்தால் முதல் நாளில் இந்தியா 267 ரன்கள் குவிப்பு

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

இந்தூர்  - நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரகானே ஆகியோரின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி முதல் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கியது.

காயம் காரணமாக விலகிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுக்கு பிறகு அவர் களம் இறங்கினார். காயத்தால் விலகிய புவனேஸ்வர்குமாருக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். உடல்நலக் குறைவால் 2-வது டெஸ்டில் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார் நிகோல்ஸ் நீக்கப்பட்டார். வாக்னருக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பெற்றார்.

இந்தியா வீரர்கள்:
கோலி (கேப்டன்), முரளி விஜய், கவுதம் காம்பீர், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, சகா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ்யாதவ்.
நியூசிலாந்து வீரர்கள்:
வில்லியம் சன் (கேப்டன்) டாம்பதம், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெஸ்சர், ரோஞ்சி, நீசம், சான்னெர், வாட்சிங், ஜிதன் பட்டேல், மெட் ஹென்சி, போல்ட்.
டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக முரளி விஜய், காம்பீர் களமிறங்கினர். முரளி விஜய் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். காம்பீர் நிதானமாக விளையாடி 29 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின்னர் புஜாரா-விராட் கோலி ஜோடி விக்கெட் விழாமல் நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100-ஐ தொட்டபோது புஜாரா விக்கெட்டை இழந்தார். அவர் 108 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகானே, விராட் கோலியுடன் நீண்டநேரம் களத்தில் இருந்தார்.

கோலி அரை சதம் கடந்து முன்னேற, ஸ்கோர் 200 ரன்னை எட்டியது.தொடர்ந்து விளையாடிய கோலி, டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அவர் 184 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இது அவருக்கு 13-வது டெஸ்ட் சதமாகும். இதேபோல் மறுமுனையில் ரகானேவும் அரை சதம் கடந்து சதத்தை நோக்கி முன்னேறினார். இதனால், இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்துள்ளது.  விராட் கோலி 103 ரன்களுடனும், ரகானே 79 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
காம்பீருக்கு வாய்ப்பு
இந்தூர் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுக்கு பிறகு நேற்று அவர் களம் இறங்கினார். 53 பந்துகளை சந்தித்த அவர் 29 ரன்கள் (3 பவுண்டரிகள் - 2 சிக்ஸர்கள் அடங்கும்) எடுத்திருந்த நிலையில் ஃபோல்ட் பந்தில் எல்.பி.டபுளயூ முறையில் அவுட்டானார்.

ரஹானே அரை சதம்
நேற்றைய ஆட்டத்தில் அஜிங்கியா ரஹானே அரை சதம் அடித்தார். இந்திய அணி 76-வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. கோலி அரை சதம் கடந்த நிலையில் 77-வது ஓவரின் முதல் பந்தில் ரஹானே சிக்சர் அடித்து அரை சதத்தினை கடந்தார். 153 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். 172 பந்துகளை எதிர்கொண்ட அவர் 79 ரன்களுடன் இன்னும் களத்தில் உள்ளார்.
விராட் கோலி அபார சதம்
கோலி அரை சதம் கடந்து முன்னேற, இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்னை எட்டியது. தொடர்ந்து விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். அவர் 184 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இது அவருக்கு 13-வது டெஸ்ட் சதமாகும். முதல் நாளில் 103 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்