முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை நீக்கக்கோரி சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை நீக்கக்கோரி சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது. இதனால் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் பங்கேற்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை நீக்ககோரி பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை மீதான தடை சட்ட விரோதமானது, காரணமே இல்லாதது என்றும் சதி நடந்து இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிபதி கூறுகையில், லோதா கமிட்டி அளித்த தீர்ப்பே இறுதியானது என்று தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை அணி பங்கேற்க முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்