முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி, ரகானே ரன் குவிப்பு : இந்தியா 5 விக்கெட்டுக்கு 557 ரன் எடுத்து டிக்ளேர்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.கேப்டன் விராத் கோலி அபாரமாக ஆடி 211 ரன்கள் குவித்தார். அஜிங்கியா ரகானே 188 ரன்களில் அவுட்டானார். ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி நேற்று மாலை தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. விக்கெட் இழப்பில்லாமல் 28 ரன்களை அது எடுத்தது.  முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இருந்த இந்தியா  நேற்று 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. கோலியும், ரகானேவும் இணைந்து ஸ்கோரை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். இருவரும், அதிரடியாக ஆடி இந்தியாவின் நிலையை வலுப்படுத்தினர்.

விராட் கோலி 347 பந்துகளைச் சந்தித்து 18 பவுண்டரிகளுடன் தனது இரட்டை சதத்தைப் போட்டார். அவர் இரட்டை சதம் போட்டதும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியதால் மைதானமே அதிர்ந்தது. கோலிக்கு இது டெஸ்ட் போட்டியில் 2வது இரட்டை சதமாகும். அவர் 211 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி  அவுட் ஆன போது, ரகானே மீது அனைவரின் கவனமும் திரும்பியது. அஜிங்கியா ரகானே 188 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.  இதுவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததில்லை. நேற்று நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 188 ரன்களில்  ரகானே ஆட்டமிழந்தார். அவரது ரன்னில்  4சிக்சர்கள் 18 பவுன்டரிகள் இடம் பெற்றிருந்தன.

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் 10, கம்பீர் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். சட்டேஸ்வர் புஜாராவின் பங்கு 41 ஆக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்