முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி ஒரே ஆண்டில் 2 இரட்டை சதம் அடித்து சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் :  நியூசிலந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேப்டன் கோலி அபாரமாக ஆடி இரட்டை சதம் போட்டு அடித்துள்ளார். அவர் குறுகிய காலத்திற்குள் 2 இரட்டை சதம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் கோலி இரண்டு இரட்டை சதங்களை அடித்து நொறுக்கி புதிய சாதனை மன்னனாக வலம் வருகிறார். இந்த சாதனையை எந்த இந்திய கேப்டனும் நிகழ்த்தியது இல்லை.

இந்திய கேப்டன் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் கேப்டனாக கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம்தான் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி இரட்டை சதம் போட்டு அசத்தினார். அது அவருக்கு முதல் இரட்டை சதமாகும்.இந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது  தற்போது கோலி இரட்டை சதம் போட்டுள்ளார்.

கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முறை சதம் அடித்துள்ளார். 2 முறை இரட்டை சதம் போட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 25 சதம் எடுத்துள்ளார். ஐ.பி.எல்.கிரிக்கெட்டில்  இவரது சதங்களின் எண்ணிக்கை 4 ஆகும். சர்வதேச   ,டி  20 போட்டிகளில் மட்டும் இதுவரை அவர் சதம் அடித்ததில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்