முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனு ராக் தாகுர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தாக்கு

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

கராச்சி :  தீவிரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் ஆட தயாராக இல்லை என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனு ராக் தாகுர் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் அரசியல் வாதியாக இவ்வாறு சொன்னாரா ?- அல்லது கிரிக்கெட் வாரிய தலைவராக சொன்னாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என  அந்த வாரியம் கேட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்  முன்னாள் தலைவரான நஜம் சேதி சர்வ தேச கிரிக்கெட்  கவுன்சிலின்(ஐ.சி.சி.) செயற்குழு வில் உள்ளார். அவர் இந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெறும் ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனு ராக் தாகுரின் கருத்துக்கு பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

அனு ராக் தாகுர் சமீபத்தில் அளித்த பேட்டிகளில் தீவிரவாதத்தை பரப்பும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் தலைவரும், ஐ.சி.சி செயற்குழுவின் தலைவருமான  நஜம் சேதிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் எதிர்ப்பை அவர் ஐ.சி.சி.செயற்குழு கூட்டத்தில் கடுமையாக எழுப்ப உள்ளார்.  அனு ராக் தாகுர் அரசியல் வாதியாக தற்போதைய கருத்தை தெரிவித்துள்ளாரா? அல்லது கிரிக்கெட் வாரிய தலைவராக கேட்டுள்ளாரா ? என  நஜம்  சேதி கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ  அலுவலக தரப்பு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago