முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரநிலையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்தபின்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையினை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில், 115 புள்ளிகளுடன் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் 2-வது இடமும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி 3ஆவது இடம் பிடித்துள்ளது.

இதேபோல, பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளுடன் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடம் பிடித்திருந்த அவர் நியூசிலாந்து தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் 2ஆவது இடமும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் சறுக்கி 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடமும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2ஆவது இடமும்  பிடித்துள்ளனர். இந்திய வீரர்களைப் பொறுத்தவரை அஜிங்கியா ரஹானே 5 இடங்கள் முன்னேறி 6ஆவது இடமும், விராத் கோலி 4 இடங்கள் முன்னேறி16ஆவது இடத்திலும் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்