முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடம்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் தொடர் நாயகன் விருது பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தானின் இம்ரான்கான் மற்றும் வெஸ்ட் இண்டீசின் மால்கம் மார்ஷ் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்துள்ளார். மேலும் இந்தூர் டெஸ்டில் 140 ரன்னுக்கு 13 விக்கெட் வீழ்த்தியது அஸ்வினுக்கு சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. முன்னதாக 2012ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 85 ரன்னுக்கு 12 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

ஒரு தொடரில் 2 முறை 10க்கும் மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. ஹர்பஜன்சிங் 2000-01 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். இதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளார். இதுபோல டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் 451 புள்ளிகளுடன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்