முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரிசு பெற்ற காரினை திருப்பி அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை : தீபா கர்மாகர் பேட்டி

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

அகர்தலா  - பி.எம்.டபுள்யூ கார் விவகாரத்தில் பரிசு பெற்ற காரினை திருப்பி அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 4-வது இடம் பிடித்து சரித்திரம் படைத்தார். அவர் மயிரிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஐதராபாத் பேட்மிண்டன் சங்க தலைவர் சார்பில் தெண்டுல்கர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஆகியோருடன் தீபா கர்மாகருக்கும் ரூ.30 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை கடந்த மாதத்தில் வழங்கினார்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தீபா கர்மாகர் இந்த காரை பராமரிக்க முடியாமல் பரிதவித்து வருகிறார். அங்குள்ள சாலைகள் மோசமாக இருப்பதால் அவரால் அந்த காரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட சொகுசு காரை திரும்ப கொடுக்க முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், பரிசு பெற்ற காரினை திருப்பி அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கர்மாகர் கூறியதாவது:-

சச்சினிடம் இருந்து ஒரு பரிசு பெறுவது என்பது மிகப்பெரிய விஷயம் ஆகும். திருப்பி அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. திருப்பி அளிக்கவும் இல்லை, பரிசினை ஏற்க மறுக்கவும் இல்லை. அகர்தாலாவில் ஷோரூம், சேவை மையம் எதுவும் இல்லை என்று தான் கூறியிருந்தேன். அதனால் அதற்கான வழிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஐதராபாத் பேட்மிண்டன் சங்கத்திடம் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்