முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசி. ஒருநாள் தொடர்: இன்று தர்மசாலாவில் தொடக்கம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் மதியம் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது. வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது போல் டோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் முத்திரை பதிக்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த போட்டியில், டெஸ்ட் தொடரில் 27 விக்கெட் கைப்பற்றிய தமிழக சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கும் இதே நிலை தான். அவரும் டெஸ்ட் தொடரில் 14 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் இருவரது இடத்தையும் நிரப்புவார்கள். இதேபோல் வேகப்பந்தில் முகமது‌ஷமி இடம் பெறவில்லை.

முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரெய்னா காய்ச்சல் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். வீராட்கோலி, ரகானே ஆகியோரது பேட்டிங் டெஸ்ட் தொடரில் சிறப்பாக இருந்தது. இருவரது ஆட்டமும் ஒருநாள் தொடரிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோனி தலைமையிலான அணி கடைசியாக இந்திய மண்ணில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இரு அணிகளும் கடைசியாக 2014-ம் ஆண்டு 5 போட்டியில் நியூசிலாந்தில் மோதின. இதில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதற்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. சவுத்தி, ஆண்டர்சனின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

டெஸ்ட் தொடரில் சாதிக்க தவறிய கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர் ஆகியோர் ஒருநாள் தொடரில் திறமையை வெளிப்படுத்த போராடுவார்கள். இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago