முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத குழுக்களை பாக். அழிக்க வேண்டும்: அமெரிக்கா மீண்டும் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள அனைத்து தீவிரவாத குழுக்களையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செப்டம்பர் 28-ம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் நடவடிக்கையால் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த வாரம் இந்த விவ காரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உரி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு ராணுவ ரீதியில் இந்தியா நடவடிக்கை எடுப்பது அவசியமானதே’ என தெரிவித்தது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:

தீவிரவாதிகள் மற்றும் வன்மம் நிறைந்த பிரிவினைவாதிகளின் பிடியில் சிக்கி பாகிஸ்தான் கடுமையாக அவதிப்பட்டு வருகி றது. தீவிரவாத அச்சுறுத்தல் பிரச் சினையில் இருந்து பாகிஸ்தானை விடுவிக்க அமெரிக்க விரும்பு கிறது. ஆனால் அதற்கு பாகிஸ் தானும் ஒத்துழைக்க வேண்டும். தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் மண் பயன்படுவதை அந்நாட்டு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்