முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தொடர் டோனிக்கு சவாலாக இருக்கும்: கவாஸ்கர் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா : இந்திய அணியில் பந்து வீச்சில் பலவீனம் காணப்படுகிறது. இதனால் இந்த ஒரு நாள் தொடர் டோனிக்கு சவாலாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறி உள்ளார்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே 5 ஒரு நாள்தொடர் நடக்கிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது. டோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆர்வத்துடன் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்  பேசுகையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வீராட் கோலி தலைமையிலான அணி முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. அவரது வெற்றியால் ஒரு நாள் தொடரில் டோனிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 35 வயதான டோனிக்கு இது சவாலான நேரமாகும். ஆட்டத்தை நிறைவு செய்வதில் அவர் திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள்  தொடரை வெல்வது இந்திய அணிக்கு கடினமானது.

டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், ஜடேஜா ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் இல்லாதது பந்து வீச்சில் பலவீனம். ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடக் கூடியது. பயம் இல்லாமல் ஆடுவார்கள். குறிப்பாக மார்ட்டின் ஒரு நாள் போட்டியில் அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார். இதேபோல கேப்டன் வில்லியம்சன், டெய்லர், ரோஞ்சி போன்ற வர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இதேபோல்  சவுக்தியன் வருகையால் அந்த அணி பந்து வீச்சிலும் பலம் பொருந்தி காணப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில் இந்திய அணி விளையாடும். இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. பந்து வீச்சில் தான் பலவீனம் காணப்படுகிறது. இதனால் இந்த ஒரு நாள் தொடர் டோனிக்கு சவாலாக இருக்கும் என்று கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்