முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

பபுவா நியுகினியா - பபுவா நியுகினியாவின் நியு பிரிட்டன் தீவுகளை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அதிகம் வசிக்காத பகுதி என்பதால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று யு.எஸ்.ஜி.எஸ் தெரிவிக்கிறது.ரிக்டர் அளவுகோலில் 6.9 என்று பதிவான இந்த நிலநடுக்கம் நியு பிரிட்டன் தீவுகளுக்கும் பபுவா நியுகினியாவின் வடகிழக்குக்கும் இடையில் கடலில் 22 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

1998-ம் ஆண்டு ஜூலை மாதம் பபுவா நியுகினியாவின் வடக்குக் கடல் பகுதியான அய்டேப் என்ற ஊருக்கு அருகே கடலுக்கு அடியில் 7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியபோது ஏற்பட்ட 2 சுனாமி பேரலைகளுக்கு சுமார் 2,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

பிஸ்மார்க் தீவுக்கூட்டங்களில் நியு பிரிட்டன் ஒரு பெரிய தீவுப்பகுதியாகும். இது 4,000கிமீ பரப்பளவு கொண்ட பசிபிக்-ஆஸ்திரேலியா கண்டத்தட்டின் மேல் உள்ளது. இப்பகுதி பசிபிக் ரிங் ஆஃப் பயர் என்று அழைக்கப்படும் பிளேட்டுகள் அடிக்கடி மோதிக்கொள்ளும் பயங்கர நிலநடுக்கப் பகுதியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago