முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது கணவர் ஜென்டில்மேன் :டிரம்ப் மீதான செக்ஸ் புகார்கள் பொய்யானவை: மனைவி ஆவேசம்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - எனது கணவர் டிரம்ப் மீதான ‘செக்ஸ்’ புகார்கள் பொய்யானவை. அவர் ஒரு ஜென்டில்மேன் என அவரது மனைவி மெலானியா ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது ‘செக்ஸ்’ வீடியோ புகார் எழுந்தது. அதில் பெண்கள் பற்றி அவர் இழிவாக கூறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதை தொடர்ந்து பல பெண்கள் டிரம்ப் மீது நேரடியாக ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதை அவர் மறுத்தார். இருந்தும், பெண்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் டொனால்டு டிரம்பின் செல்வாக்கு சரிந்தது. இது சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பிரதிபலித்தது.

இந்த நிலையில் முன்னாள் மாடல் அழகியும், டொனால்டு டிரம்பின் மனைவியுமான மெலானியா (45) பேட்டி அளித்தார். அதில் பெண்கள் பற்றி இழிவான கருத்துக்களை டிரம்ப் கூறியதாக வெளியான வீடியோ டேப் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் டிரம்ப் மீது பெண்கள் கூறிய ‘செக்ஸ்’ புகார்கள் பொய்யானவை. ஏனெனில் எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு ‘ஜென்டில்மேன்’. அவர் எப்போதும் இது போன்ற தவறுகள் செய்யமாட்டார்.பெண்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றார். மேலும் தனது கணவர் மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் புகார்களை மறுத்து பெண்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago