Idhayam Matrimony

அலெப்போ நகரில் 8 மணிநேர போர்நிறுத்தம் : சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்  - சிரியா நாட்டில் புரட்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கான தாக்குதலை தற்காலிகமாக 8 மணிநேரம் நிறுத்திவைக்க சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன. சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அமெப்போ நகரின் கிழக்கு பகுதியில் அரசுக்கு எதிரான புரட்சிப்படைப் போராளிகள் தங்கியுள்ள இடங்களின்மீது நேற்று நடைபெற்ற விமான தாக்குதலில் குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் வகையில் அலெப்போவில் 48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து, வரும் 20-ம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிவரை 8 மணிநேர தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷியாவுக்கான ஐ.நா.தூதர் விட்டலே சர்கின், இருதரப்பினருக்கும் இடையில் ஒரு சமாதான ஏற்பாடு எட்டப்படுவதற்கு 8 மணிநேர போர் நிறுத்தம் போதுமானது அல்ல; அங்கு 48 முதல் 72 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்கான முதல் முன்முயற்சிதான் இந்த 8 மணிநேர போர்நிறுத்தம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின் பேரில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ள புரட்சிப் படையினர் அங்கிருந்து சமாதானமான முறையில் வெளியேற்றுவதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருவதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்