முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

''பயங்கரவாதிகளின் தாயகம் பாகிஸ்தான்” பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து கருத்துகூற அமெரிக்கா மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ''பயங்கரவாதிகளின் தாயகம் பாகிஸ்தான்”  என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம்  செய்திருந்தார். மோடியின் இந்த விமர்சனத்துக்கு கருத்துகூற அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே ஆழமாக உள்ள கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்க்கும் வழிகளை காண வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்கா, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாயகமாக விளங்குகிறது என்ற பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த எர்னஸ்ட் கூறியதாவது:-
“ இந்த கருத்து குறித்து (பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாயகம்) நான் எதுவும் பேசப்போவது இல்லை. பொதுவாக நான் சொல்வது என்னவெனில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை சுமூகமான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

பயங்கரவாதிகளால் பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பது பற்றி நாம் பலமுறை விவாதித்து இருக்கிறோம். பாகிஸ்தான் மக்கள் தான் இது போன்ற பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உண்மையில் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்