முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாமல் புலம்புவதை டிரம்ப் நிறுத்த வேண்டும்: ஒபாமா அறிவுரை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஏதேதோ பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பராக் ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அதிபர் பராக் ஒபாமா பிரசாரம் செய்து வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸியை ஒபாமா சந்தித்தார். அதை தொடர்ந்து அங்குள்ள ரோஜா தோட்டத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஏதேதோ புலம்பி வருகிறார். முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை போலியாக புகழ்ந்து வருகிறார். அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி ஏற்கும் முன்பு ரஷியா செல்ல விரும்புவதாகவும், புதின் கொள்கைகளை மாடல் ஆக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் பேசி வருகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதேதோ பேசி டிரம்ப் நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவர் புலம்புவதை நிறுத்திவிட்டு மக்களிடம் ஓட்டு வாங்கும் செயல்களில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்துகிறேன் என்றார். டிரம்ப் பல்வேறு செக்ஸ் புகார்களில் சிக்கியுள்ளார் அதனால் அவருக்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹிலாரி கிளிண்டனுக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகியுள்ளது. ஹிலாரி கிளிண்டனுடன் ஆன 3-வது நேரடி விவாதத்திற்கு பிறகு ஹிலாரி கிளிண்டனுக்கு மேலும் ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்