முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 30 வது முறை போர் நிறுத்த விதி மீறல் -துப்பாக்கிச்சூடு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், பாகிஸ்தான் ராணுவம் கடந்த இரு பது நாட்களில் 30வது முறையாக போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் பாகிஸ்தான் நிலைகளின் மீது தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள்.  பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்களும்திருப்பி சுட்டார்கள்.இந்த நிலையில் எல்லையில் 6 பாகிஸ்தான்  தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை பி.எஸ்.எப். படையினர் முறியடித்தார்கள்.

 எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து  போர் நிறுத்த விதி மீறலை மேற்கொண்டு வருகிறது .  நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, அந்த வீரர்கள் போர் நிறுத்த விதியை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். கடந்த 12 மணி நேரத்தில், பாகிஸ்தான் வீரர்கள் இராண்டாவது முறை இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அவர்கள் எல்லை கட்டுப்பாடு கோடு(எல்.ஓ.சி.) பகுதியான பூஞ்ச் மாவட்டத்தின் பிர் மன்ச்சலில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பாகிஸ்தான் தரப்பினருக்கு பதிலடி தரும் வகையில் இந்திய எல்லை வீர்களும் திருப்பி சுட்டார்கள். இதில் இந்திய தரப்பில் எந்த சேதமும் ஏற்பட வில்லை. நேற்று முன்தினமும் பாகிஸ்தான் ராணுவத்தினர்  ரஜவுரி மாவட்டம் தர்கண்டியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

 இந்திய ராணுவம் கடந்த மாதம் 28ம் தேதியன்று எல்.ஓ.சி.பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்த 38 பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றது. அந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கடந்த இருபது நாட்களில் , 30 முறை போர் நிறுத்த விதியை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

 காஷ்மீரில் உள்ள யுரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் தேதியன்று பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில் 19 வீரர்கள் பலியானதுடன் 30 வீரர்கள் காயம் அடைந்தார்கள்.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்க முடியாது என இந்தியா கடுமையாக எச்சரித்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு எல்.ஓ.சியில். 3 8 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் அந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது.

தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவல் நடத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்களும் எல்லையில் துப்பாக்கிச்சூடுகளை நடத்தி இந்திய வீரர்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். இதைப்போன்ற தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை  பி.எஸ்.எப் தற்போது முறியடித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சர்வ தேச எல்லை பகுதி உள்ளது. அந்த பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகளின் முயற்சியை பி.எஸ்.எப். படையினர் முறியடித்தார்கள். தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற போது, ராணுவ வீர்கள் சரமாரியாக துப்பாக்கிக்குண்டுகளை பயன்படுத்தினர். இந்த தாக்குதல்  நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு நடந்தது.

 ராணுவ தாக்குதல் நடந்த போது எல்லை பகுதியில்  வீரர்கள் ரோந்து வாகனம் சென்றது. இரு தரப்பினர் இடையே 20 நிமிடம் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்திய ராணுவ வீர்களின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.சிலர் அதில் காயம் அடைந்தார்கள்.
பி.எஸ்.எப் படையில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்