முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரிக்கு வாக்களித்தால் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திய பிரபல பாடகி மடோனா !

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு வாக்களித்தால், தான் அவர்கள் விரும்பும் வகையில் இருப்பேன் என்று கூறி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ள பிரபல பாடகியும், நடிகையுமான மடோனா. தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவடைய  அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான இறுதிகட்ட விவாதம் நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு பெருமளவில் ஆதரவு பெருகி வருகிறது  தேர்தல் தொடர்பாக அவ்வப்போது பல சுவரஸ்யமான தகவல்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையும் பாப் பாடகியுமான மடோனா(58) ஒரு அதிரடி பேட்டிஅளித்துள்ளார்.நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மடோனா பங்கேற்ற அவர், ‘ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்கப் போகிறேன்.

குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டிரம்பை தோற்கடித்து ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால், இயற்கைக்கு மாறான முறையில் கூட அவர்களுடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பேன்’ என அதிரடியாக பேசியுள்ளார். இதுமட்டுமல்லாமல், ஹிலாரிக்கு வாக்களிக்கும் நபரிடம் எவ்வாறெல்லாம் உல்லாசமாக இருப்பேன் என்பதையும் வெளிப்படையாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்