முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாமா பேப்பர்ஸ் லீக் விவகாரம்: நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பனாமா பேப்பர்ஸ் வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் கடந்த ஏப்ரல் மாதம் கசிந்தது. அதுதான் 'பனாமா பேப்பர்ஸ்'.இந்த அம்பலப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. அந்த நாட்டில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதை நவாஸ் ஷெரீப் மறுத்தார். இருப்பினும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதன்பேரில் நீதி விசாரணை நடத்தப்படும் என நவாஸ் ஷெரீப் அறிவித்தார். மேலும் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றசாட்டுக்கு தானாக முன்வந்து விளக்கமளித்தார். தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலக தயார் என்றும் கூறியிருந்தார். இதனிடையே, கடைசியாக வந்த தகவலின் படி, நவாஸ் ஷெரீப்பின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்களின் விசாரணை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரை பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இருந்து அந்த அமைப்பு நீக்கியது.

இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் நவாஸ் ஷெரீப்பை பதவி விலக வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டனர்.பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப், அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்