முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைக்கு எல்லை கிடையாது, தேசத்திற்கு எல்லை உண்டு: மத்திய அமைச்சர் வெங்கையா கருத்து

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கலைக்கு எல்லை கிடையாது, தேசத்திற்கு எல்லை உண்டு என்று, பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இவ்வாறு பதிலளித்துள்ளார். காஷ்மீரில் யுரி ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது. எனவே, நடிகர் ரன்பீர் கபூர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பில் தயாரான ‘ஏ தில் ஹை முஸ்கில்’ படம் திரைக்கு வருவதற்கு சிக்கலை சந்தித்தது.

கரண் ஜோஹாரின் ‘ஏ தில் ஹைன் முஷ்கில்’ என்ற திரைப்படத்தை வெளியிட இந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை என்ற விவகாரம் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாகியது. பாகிஸ்தான் நடிகர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகர் சல்மான் கான் ‘‘பாகிஸ்தான் நடிகர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. முறையான ‘விசா’ உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் அவர்கள் வருகிறார்கள். கலையையும், பயங்கரவாதத்தையும் ஒன்றுபடுத்த கூடாது’’ என்றார். அரசியலையை, கலை மற்றும் விளையாட்டுடன் ஒப்பிடாதீர்கள் என்றெல்லாம் கருத்துக்கள் எழுந்தது.

இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அளித்துள்ள பேட்டியில், ”பாகிஸ்தானிய நடிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு எதுவும் கிடையாது. அவர்களுக்கு இந்திய தயாரிப்பாளர்கள் வேலை வழங்கும் விவகாரத்தில் தலையிடுவதும் கிடையாது, ஆனால் இந்தியாவில் பாகிஸ்தான் மீது ஒரு கோபமான சூழ்நிலையானது உள்ளது. அனைத்து துறையில் உள்ள மக்களும் இதனை கருத்தில் கொண்டிருக்கவேண்டும்.” என்றார்.  பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல் மற்றும் நிதி வழங்குதல் ஆகியவற்றால் பாகிஸ்தானுக்கு இந்திய பொதுமக்கள் மத்தியில் வலுவான எதிர்ப்பு உள்ளது. இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும், அதன்படி செயல்பட வேண்டும், அவர், கலைஞராக இருக்கலாம், இயக்குநர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் அல்லது அரசியல்வாதியாக கூட இருக்கலாம்..

கலைக்கு எல்லைக்கிடையாது என்று கூறுவது மிகவும் எளிதானது, ஆனால் நாடுகளுக்கு எல்லை உள்ளது... போரின் போது, அந்நாட்டுடன் சேர்ந்து ஒருவர் நடித்து கொண்டு இருப்பார், இதுபோன்ற செயல்கள் நடக்கக்கூடாது,” என்றார். மேலும் மீடியாக்களும் தேசிய நலனை கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறிஉள்ளார். பாகிஸ்தான் நடிகர்களை புறக்கணிக்கும் முடிவானது மத்திய அரசால் எடுக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு எந்தஒரு அறிவுரையும் வழங்கவில்லை. புறக்கணிப்பு விவகாரத்தில் திரைப்பட துறையை சேர்ந்த மக்கள் முடிவு எடுத்து உள்ளனர். அவர்கள் இவ்விவகாரத்தில் மத்திய அரசை இழுப்பதற்கு பதிலாக, அவர்களாகவே ஆலோசிக்க வேண்டும்.

இப்பிரச்சனையை அவர்களுக்கு உள்ளாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்பது எல்லாம் தேவையில்லாதது மற்றும் மலிவான விளம்பரம் என்றும் வெங்கையா நாயுடு கூறிஉள்ளார். பாகிஸ்தான் கலைஞர்கள் நடித்த படங்களை வெளியிட தடை விதித்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்த அனுராக் காஷ்யப், பிரதமர் தனது லாகூர் பயணத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்